பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக எம்பி! ஜாமீன் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு .!! - Seithipunal
Seithipunal


இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பல மல்லித்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லவும் முற்பட்டனர். 

மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனை பல கட்ட போராட்டத்திற்கு பிறகு பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். மேலும் இந்திய மாநிலத்தில் சமயத்தின் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக மாறு பாஜக எம்.பிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் பாலியல் வழக்கில் ஜாமீன் வழங்க கோரி பாஜக எம்.பி பிரிட்ஜ் பூஷன் சரண் சிங் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் வினோத் தோமர் ஆகியோருக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. 

பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் வினோத் தோமர் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 20 ஆம் தேதி நடைபெறும். அடுத்த விசாரணை தேதி வரை அவர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Court given Interim bail for BJP MP caught in sex case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->