கொரோனா தடுப்பூசியின் 2வது டோசை போட்டுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.! 
                                    
                                    
                                   corona vaccine 2nd dose for pm modi
 
                                 
                               
                                
                                      
                                            இந்தியாவில் கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அவசரகாலத் தேவைக்கான கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி வாங்கியது. இதையடுத்து கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. 
முதல் கட்டமாக சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனிடையே 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கும், இணை நோய் கொண்ட 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கான பணிகள் கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கியது. இது குறித்து மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
 முதியவர்கள் தங்களது ஆதார் எண். வாக்காளர் அடையாள அட்டை. பேன் கார்டு உள்ளிட்டவை கொண்டு கோவின்’செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்ய இயலாதவர்கள் தடுப்பூசி போடும் இடத்திற்கு நேரடியாக சென்று பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதன் தொடர்ச்சியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பூசி போட்ட சில வாரங்கள் கழித்து இரண்டாவது டோஸ்  எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் 2வது டோசை போட்டுக்கொண்டார்.
                                     
                                 
                   
                       English Summary
                       corona vaccine 2nd dose for pm modi