பாஜக எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா வைரஸ்.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


ஹரியான மாநிலத்தில் சூரியகிரகணம் வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்கள் முன்பு சூரியகிரகணம் வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டுள்ளது. 

ஹரியான மாநிலம் குருஷேத்ரா மாவட்டத்தில் உள்ள  தானேசர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ  சுபாஷ் சுதா. இவர் சூரிய கிரகணத்தன்று நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அதில் இருந்து அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகத்தின் பேரில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

உடனடியாக அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு வலிப்பதாக அவர் கூறவே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் எம்எல்ஏ குடும்பத்தினர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

எம்எல்ஏ மனைவிக்கு கொரோனா பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. இருந்தபோதிலும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இதேபோல தமிழகத்தில் கொரோனாவுக்கு திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் உயிரிழந்தார். மேலும் சில எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவரும் கொரோனா வைரசால் உயிரிழந்தது  குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona positive in bjp mla


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal