ஓ.பி.சி. இடஒதுக்கீடு விவகாரம்.. சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம்.!! - Seithipunal
Seithipunal


இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு கடந்த 2017&18 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது. அதனால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்.

இந்த சமூக அநீதியை எதிர்த்தும், பாதிக்கப்பட்ட பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு நீதி வழங்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பா.ம.க, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடுத்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை தற்போது சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  

இந்த நிலையில், ஓ.பி.சி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது மிகப்பெரிய துரோகம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். இது குறித்து அவர் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இது குறித்த கடிதத்தில், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் ஓபிசி வேட்பாளர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவு சோதனை (நீட்) மூலம் மாநில / யூடி மருத்துவ கல்வி நிறுவனங்களில் படிக்க வழிவகை செய்வது மிகப்பெரிய துரோகம் ஆகும். 

அரசியல் சாசன அமர்வின் படி, இடஒதுக்கீடு மீறல் என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், கடந்த 2007 ஆம் வருடம் முதல் ஓ.பி.சி பிரிவினருக்கு, 11 ஆயிரம் இடங்கள் மறுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress Sonia Gandhi Letter to PM Modi about OBC Reservation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->