ராகுல் காந்தி தேசிய கீதத்தை அவமதித்ததாக புகார்; ''பாஜக ‘ஐடி விங்’ தலைவருக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.''காங்கிரஸ் நோட்டீஸ்..!
Congress issues notice to BJP IT wing chief demanding unconditional apology for Rahul Gandhi's insult to national anthem
கடந்த 13-ஆம் தேதி நடந்த படைப்பாற்றல் காங்கிரஸ் மாநாட்டின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டி பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.
அதில், தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருக்கும் போது ராகுல் காந்தி மேடையில் தலைவர்களுடன் கைகுலுக்கி நடந்து செல்வது போல் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோவை பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாளவியா பகிர்ந்து, 'ராகுல் காந்தி மீண்டும் தேசிய கீதத்தை அவமதித்து நாட்டின் பெருமையை சீர்குலைத்து விட்டார்' என்று பதிவிட்டிருந்தார்.
ஆனால், இந்த சம்பவம் ஒலி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே நடந்ததாக காங்கிரஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பொய் பிரசாரம் செய்ததாகக் கூறி காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீக்ஷித் சார்பில் அமித் மாளவியாவிற்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டிஸில், நிகழ்ச்சியில் ஏற்கனவே முறைப்படி தேசிய கீதம் இசைக்கப்பட்டு தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் ஒலி பெருக்கி பெட்டியில் ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்ப தவறு காரணமாகவே பாடல் மீண்டும் ஒலித்ததாக கூறப்பட்டுள்ளது.
எனவே, இந்த பதிவை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், 48 மணி நேரத்திற்குள் அமித் மாளவியா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சுதந்திர தினத்தன்று காங்கிரஸ் தலைமையகத்தில் 'வந்தே மாதரம்' பாடல் தொடர்பாக நடந்த பிரச்னையையும் பாஜக சுட்டிக்காட்டி விமர்சித்து வரும் சூழலில், இந்த சட்டப்பூர்வ நோட்டீஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Congress issues notice to BJP IT wing chief demanding unconditional apology for Rahul Gandhi's insult to national anthem