புகாரை கண்டுகொள்ளாத மாநகராட்சி அலுவலகத்தில் பாம்பை விட்டதால் பரபரப்பு.. வைரல் வீடியோ.!
Complaint person snake to corporation office in telungana
தெலுங்கானாவில் புகாரை கண்டு கொள்ளாத மாநகராட்சி அலுவலகத்தில் ஒருவர் பாம்பை விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதில் வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு நிலைமையை சீர் செய்ய புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை மாநகராட்சி அலுவலகம் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தெலுங்கானாவின் ஹைதராபாத் பகுதியில் வசிக்கும் ஆல்வால் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் வீட்டுக்குள் பாம்பு புகுந்துள்ளது. இதனைப் பிடித்த அவர் கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி வார்டு அலுவலகத்திற்கு சென்று அதனை விட்டுள்ளார்.
தற்போது இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மேஜையின் மீது பாம்பு ஒன்று செல்லக்கூடிய வீடியோ வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தனது புகாரை கண்டுகொள்ளாத ஆத்திரத்தில் அந்த நபர் பாம்பை மாநகராட்சி அலுவலகத்தில் விட்டதாக கூறப்படுகிறது.
English Summary
Complaint person snake to corporation office in telungana