பியூட்டி பார்லர் என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தல்.. பணத்தேவையால் கடத்தல் பெண்மணியாக மாறிய சோகம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை காவல்துறை கடந்த சில வாரமாக போதைப்பொருள் கடத்தும் கும்பலை பிடிக்கும் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 10 க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து ரூ.11 இலட்சம் மதிப்புள்ள 109 கிராம் கோகைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில், இதனை வைத்திருந்த 24 வயது பெண்ணையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவரது பெயர் மஞ்சுஷா சிங் என்பதும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாகவே இவர் மும்பைக்கு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. 

இவர் சிவாஜி நகர் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த நிலையில், பணத்தட்டுப்பாடு காரணமாக போதைப்பொருள் கடத்தலில் இறங்கியதும் தெரியவந்துள்ளது. மேலும், போதைப்பொருளை அவர் உபயோகம் செய்யாமல் இருந்த நிலையில், அதனை உரியவரிடம் சேர்த்தால் ரூ.10 ஆயிரம் பணம் தரப்பட்டுள்ளது. 

இந்த தொழிலில் கடந்த நான்கு மாதமாக ஈடுபட்டு வரும் நிலையில், பணத்தேவை காரணமாக வேறு வழியின்றி இந்த தொழிலில் இறங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

COCAINE TRANSPORT GIRL ARREST BY MUMBAI POLICE IN SIVAJI NAGAR


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->