நாளை தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். கட்சிக்கு கூட்டணி, தொகுதி பங்கீடு என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நாளை சென்னைக்கு வருகை தருகிறார். அதன் படி தேர்தல் குறித்து டிஜிபி, தலைமை செயலாளருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.

 

2 நாள் நடைபெறும் இந்த ஆலோசனையில் முதல் நாளாக நாளை காலை அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை பிற்பகல், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினருடன் ஆலோசனை நடத்துகிறார்.

நாளை மறுநாள் தமிழகம், கர்நாடகா, கேரளா மாநில தேர்தல் அதிகாரிகள், வருமான வரி, சுங்கத்துறை உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief election commissioner come in tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->