ஒரே கிராமத்தை சேர்ந்த 50 பேர் பலி.! நாட்டையே அதிரவைத்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சத்தீஷ்கர் மாநிலத்தில் சுஷ்மா மாவட்டத்தில் உள்ள ரெக்டாகட்டா என்ற கிராமத்தில் சுமார் 800 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மர்ம காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. 

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால்களில் வீக்கம், காய்ச்சல் மற்றும் வாந்தி உண்டாகும். இவர்களுக்கு எந்த சிகிச்சை அளித்தாலும் பலன் அளிக்காமல் உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த மர்ம நோயால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நோயால் கடந்த 6 மாதங்களில் மொத்தம் 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது எந்த வகையான நோய் என்பது தெரியாமல் அக்கிராம மக்கள் உயிர் பயத்தில் தவித்து வருகிறார்கள். 

இதனை தொடர்ந்து ரெக்டாகட்டா கிராமம் மற்றும் அதனை சுற்றுப்புற  பகுதிகளிலிருந்து அதிகாரிகள் மண் மற்றும் குடிநீரை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chhattisgarh Regtagata Mysterious fever


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->