இனி இவர்களுக்கு அரசு வேலை கிடையாது! சட்டீஸ்கர் முதல்வரின் அறிவிப்புக்கு குவியும் பாராட்டுக்கள்! - Seithipunal
Seithipunal


சட்டீஸ்கர் மாநிலம், இந்தியாவின் மத்திய பகுதியில் உள்ளது. இதன் தலைநகரம் ரய்பூர். இந்த மாநிலத்தின் முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேஷ் பகேல் உள்ளார். 

இன்று இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரய்ப்பூரில் உள்ள காவல்துறை மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பூபேஷ் பகேல் உரையாற்றினார். 

அம்மாநில மொழியான சத்தீஸ்கர்ஷி மொழியில் அவர் உரையாட தொடங்கி வரவேற்பை பெற்றார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, மாநிலத்தின் அதிமுக்கியம் வாய்ந்ததாக பெண்களின் பாதுகாப்பு உள்ளது. 

அவர்களின் பாதுகாப்புக்காக அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும். பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு ஈடுபட்டவர்களுக்கு மாநில அரசாங்கத்தின் எந்த வேலையிலும் சேரும் தகுதியை இழப்பார்கள்'' என அறிவித்துள்ளார். 

அந்த மாநிலத்தின் நகரங்களில் இருந்து தொலைதூரப் பகுதியில் வசிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்தியாவின் முக்கிய நுழைவுத் தேர்வுகளை எழுத தயார்படுத்திக் கொள்ளும் வகையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். 

மேலும் நுண்ணறிவு போன்ற மென்பொருள் துறையின் உயர்தொழில் நுட்பங்களுக்கான பாடங்களை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். 

இது போன்ற பல திட்டங்களை அறிவித்த பூபேஷ் பகேல் பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்துபவர்களுக்கு அரசு வேலை கிடையாது என தெரிவித்திருந்தது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில் சில நாட்களுக்கு முன்பாக முதல்வர் அசோக் கெலாட் இது போன்ற அறிவிப்பை அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chhattisgarh Chief Minister Announcement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->