நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் உச்சநீதிமன்ற நீதிபதியாக அதிகாரப்பூர்வ நியமனம்.! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி என்.கிருபாகரன் ஆகியோருக்கு அடுத்தநிலையில் மூன்றாவது நீதிபதியாக பதவி வகித்து வருபவர் எம்.எம். சுந்தரேஷ் (வயது 59). இவர்களில் நீதிபதி என். கிருபாகரன் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், மூத்த நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் உள்ளிட்ட 9 பேரின் பெயர்களை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய கொஜிலியம் குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்தது. 

இந்த பரிந்துரையை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்ததும், நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் உட்பட 9 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாக சட்ட அமைச்சகத்தால் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்க்கப்பட்டது. இன்று மாலை அதற்கான அறிவிப்புகளும் அதிகாரபூர்வமாக வெளியாகியது. விரைவில் எம்.எம். சுந்தரேஷ் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கிறார். 

நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் கடந்த 1962 ஆம் வருடம் ஜூலை மதம் 21 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார். தனது பள்ளிப்படிப்பினை ஈரோட்டிலேயே நிறைவு செய்த நீதிபதி எம்.எம் சுந்தரேஷ், சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ பட்டப்படிப்பு, மெட்ராஸ் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு ஆகியவற்றை நிறைவு செய்தார். 

கடந்த 1985 ஆம் வருடத்தில் வழக்கறிஞராக பதிவு செய்த நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், கடந்த 1991 - 1996 ஆம் காலகட்டத்தில் அரசு வழக்கறிஞராவும் பணியாற்றினார். குற்றவியல் உரிமையியல் வழக்குகளில் அதிக அனுபவம் கொண்ட நீதிபதியும் இவர் ஆவார். சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009 ஆம் வருடம் கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், கடந்த 2011 ஆம் வருடம் நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். தற்போது உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai High Court Justice MM Sundaresh Appoints Supreme Court of India Judge


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->