ஒரே நாடு; ஒரே தேர்தல் || ஆய்வு குழு உறுப்பினர்கள் யார் யார்? மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் நாடாளுமன்ற பொது தேர்தலுடன் சட்டமன்ற பொது தேர்தலையும் நடத்தும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையின் அடிப்படையில் சட்டம் முன்வடிவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. வரும் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இது குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராயும் 8 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதிரஞ்சன் சௌத்ரி, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் குலாம் நபி ஆசாத், 15வது மத்திய நிதி குழு தலைவர் என்.கே சிங், மக்களவையில் முன்னாள் செயலாளர் சுபாஷ், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே மற்றும் முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் அடங்கிய 8 பேர் கொண்ட குழுவினை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தக் குழு கடந்த 1950 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்தும் பணியானது இந்த குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள், வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை, வாக்குப்பதிவு இயந்திரங்களின் கையிருப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு கால நிர்ணயம் வழங்காமல் விரைந்து பணிகளை முடிக்க மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CentralGovt announced one nation one election review committee members


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->