தீவிரமடையும் கொரோனா பரவல்.!! மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனாஅதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், பீதி அடைய தேவையில்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.


பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மன்சுக் மாண்டவியா "கொரோனா குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பீதியடைய தேவையில்லை. மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும். கண்காணிப்பை தீவிரப்படுத்தி அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பில் மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளும் மத்திய அரசு வழங்கும்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt issued warning by intensifying corona spread


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->