#Breaking: வச்சாம் பாரு ஆப்பு... ஓ.டி.டி தளங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு..! மத்திய அரசு தடாலடி.! - Seithipunal
Seithipunal


அமேசான், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் போன்ற ஓ.டி.டி தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்து, சமூக வலைதளங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் நம்மிடையே தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், அதனால் நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் அதிகளவில் இருக்கிறது. இதில், முக்கிய விஷயமாக ஏற்படும் பாதிப்புகளும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 

இணையங்களில் 10 விழுக்காடு நன்மைகள் இருந்தால், 90 விழுக்காடு தீமைகள் இருப்பதாகவும் சட்ட நிபுணர்கள் குற்றம் சாட்டப்படுகிறது. தவறான தகவல்களை நாம் தெரிந்தோ தெரியாமலோ தொடர்ந்து செய்து வந்தால், அவை நம்மை கட்டுப்படுத்தும் ஆபத்தும் இருக்கிறது. 

அமேசான், ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ப்ளிக்ஸ் போன்ற ஒ.டி.டி தளங்களில் வெளியாகும் வீடியோ காட்சிகள் மற்றும் திரைப்படங்கள் தொடர்பான வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. பாலியல் ரீதியான காட்சி, பாலியல் உறவு ரீதியான காட்சி ஆபாச படங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் காட்சிப்படுத்தப்படும் நிகழ்வுகள், வன்முறையை தூண்டும் வகையில் இன மற்றும் மத ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தும் வீடியோக்கள் என பல்வேறு விஷயங்கள் கட்டுக்கடங்காமல் இருந்து வந்தது. 

இந்நிலையில், இது தொடர்பாக விரைந்து மத்திய, மாநில அரசுகள் ஓ.டி.டி தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்த நிலையில், ஓ.டி.டி தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் விதமான கருத்துக்களை தணிக்கை செய்யவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமேசான், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் போன்ற ஓ.டி.டி தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்து, சமூக வலைதளங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Announce Annexure for OTT Platform


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->