மகாராஷ்டிரா || மாணவர்களுக்கு தண்டனை விதித்த 2 ஆசிரியைகள் மீது வழக்கு.!! 
                                    
                                    
                                   case file on two teachers for punishment to student in maharastra 
 
                                 
                               
                                
                                      
                                            மகாராஷ்டிரா || மாணவர்களுக்கு தண்டனை விதித்த 2 ஆசிரியைகள் மீது வழக்கு.!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் உல்லாஸ் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களிடம் கல்வி கட்டணம் குறித்த அறிவிப்பு படிவங்களில் பெற்றோரின் கையெழுத்து வாங்கி வருமாறு ஆசிரியர்கள் தெரிவித்து இருந்தனர். 
இந்தப் படிவத்தில் மாணவர் ஒருவர் கையொப்பம் வாங்காமல் வந்துள்ளார். இதனால் ஆசிரியர் அந்த மாணவனை ஸ்டீல் ரூலர் மூலம் அந்த மாணவரை அடித்து, வகுப்பு முடியும் வரை மாணவரை பெஞ்சில் நிற்க வைத்துள்ளார். 

இதேபோன்று மற்றொரு ஆசிரியை ஒருவர் ஏழாம் வகுப்பு மாணவரை வகுப்பு முடியும் வரை கைகளை உயர்த்தி நிற்க சொல்லி தண்டித்துள்ளார். இந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். 
இதைக்கேட்ட பெற்றோர் ஆசிரியைகளுக்கு எதிராக போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போலீசார் மாணவர்களுக்கு தண்டனை விதித்த இரண்டு ஆசிரியைகள் மீதும் வழக்கு பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
                                     
                                 
                   
                       English Summary
                       case file on two teachers for punishment to student in maharastra