பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் ஈசுவரப்பா மீது வழக்கு பதிவு - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள தேவாங்கரே மாவட்டத்தில் கர்நாடக பா.ஜ.க. புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் மற்றும் முன்னாள் அமைச்சரான ஈசுவரப்பா கலந்து கொண்டார்.

அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, டி.கே. சுரேஷ் மற்றும் வினய் குல்கர்னி இருவரும் தேச துரோகிகள். ஜின்னாவின் வழித்தோன்றல்களாக உள்ளவர்கள் நாட்டை பிரிப்பது பற்றி பேசுகின்றனர். நாட்டை பிரிப்பவர்களை விட்டு விட கூடாது. அவர்கள் துப்பாக்கியால் சுட்டு, கொல்லப்பட வேண்டும். அந்த வகையில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் மோடியை நான் கேட்டு கொள்கிறேன் என பேசியுள்ளார்.

அவருடைய இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, காங்கிரஸ் தலைவர்களான பிரியங்க கார்கே, ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததுடன், இருபத்துநான்கு மணிநேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர்.

இந்த நிலையில், ஈசுவரப்பாவுக்கு எதிராக, தேவாங்கரே நகரில் உள்ள பராங்கே காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு எப்.ஐ.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் உறுதி செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file against bjp former minister eswarappa


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->