வயநாடு பேரிடர் எதிரொலி : முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரளாவில் தீவிரமடையும் பிரச்சாரம்..!! - Seithipunal
Seithipunal


நீண்ட காலமாக முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. முல்லைப் பெரியாறு அணை வலுவாக இல்லை. அணையின் பாதுகாப்பு கருதி அங்கு புதிய அணை கட்டப் பட வேண்டும் என்பதில் கேரளா உறுதியாக உள்ளது. 

ஆனால் தமிழக அரசோ, முல்லைப் பெரியாறு அணை வலுவாகத் தான் உள்ளது. எந்த பிரச்சினையும் இல்லை என்றே தொடர்ந்து புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை முன் வைத்து, முல்லைப் பெரியாறு அணை ஒருவேளை உடைந்தால் இந்தியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்று கேரளா அரசியல்வாதிகளும், நெட்டிசன்களும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

முன்னர் 2018ல் கேரளா வெள்ளத்தால் பாதிக்கப் பட்டது. இப்போது வயநாட்டில் நிலச்சரிவு. அதேபோல் 130 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணை உடைந்தால், நிச்சயம் 4 அல்லது 5 மாவட்டங்களாவது நீரில் மூழ்கும். எனவே இரு மாநில அரசுகளும் விரைவில் இதற்குத் தீர்வு காண வேண்டும். 

முல்லைப் பெரியாறு அணை எப்போதோ காலாவதியாகி விட்டது. இதுகுறித்து பல்வேறு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு விட்டன. ஆனால் கேரளா அரசு ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்றே விரும்புவதாகத் தெரிகிறது. 

தாமதிக்காமல் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும். இது 3.5 மில்லியன் மக்களுடைய பாதுகாப்பு பிரச்சினையாக உள்ளது.  #DecommissionMullaperiyarDam #SaveKerala #savemullaperiyar என்ற ஹேஷ் டேக்குகளை பயன்படுத்தி இந்த பிரச்சாரம் கேரளாவில் தீவிரமடைந்து வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Campaign For Mullai Periyar Dam in Kerala Due to Wayanad Disaster


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->