பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் ஏன்?.. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையான விலையேற்றத்தை கண்டுள்ள நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் டெல்லியில் உயர்ந்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் எரிபொருள் விலை உயர்வை திரும்ப பெறக்கூறி போராட்டம் நடத்தி வருகின்றன.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலம் மற்றும் பாஜக ஆட்சி செய்து வரும் மத்திய பிரதேசம் மாநிலத்தில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து சென்றுவிட்டது. 

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், விலை உயர்வு தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். இந்த பேட்டியில், " எரிபொருள் விலை உயர்வுக்கு 2 காரணங்கள் உள்ளது. 

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் உற்பத்தி குறைப்பு மற்றும் எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகள் அதிகளவு இலாபம் பார்ப்பதற்கு குறைவான அளவிலான எரிபொருள் உற்பத்தி செய்தல் போன்றவை இருக்கிறது. இதனால் நுகர்வோர் பட்டியலில் இருக்கும் நாடுகள் பாதிக்கப்படுகின்றன. 

விலை குறைப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளிடம் பேசப்பட்டு வருகிறது. பல்வேறு வளர்ச்சிப்பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகளின் வரி சேர்க்கப்படுகிறது. வளர்ச்சிப்பணிகளுக்கு செலவு செய்வது வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும். அதிகளவிலான முதலீடுகள் ஈர்க்கப்ட்டுள்ளது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cabinet Minister for Petroleum Dharmendra Pradhan Explain about Petrol diesel Price Increase Issue


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->