பட்ஜெட் 2024: ''வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை'' - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


தொழில் தொடங்க இளைஞர்களுக்கு வடிவில்லா கடனுதவி வழங்க ரூ. 1 லட்சம் கோடி நிதி தொகுப்பு ஏற்படுத்தப்படும். மாநிலங்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன் உதவி திட்டத்திற்கு ரூ. 1.3 லட்சம் கோடி வழங்கப்படும். 

நிதி பற்றாக்குறை எதிர்வரும் ஆண்டில் ஜிஎஸ்டியில் 5.1% இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 2 மடங்கு அதிகாரித்துள்ளது. ஏற்கனவே 7 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சுற்றுலா மேம்படுத்தவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் 2024-25 
பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்படும். துறைமுகங்கள் மற்றும் தொழிற்சங்கங்களை இணைக்கும் வகையில் 3 முக்கிய ரயில்வே பெரு வழித்தடங்கள் அமைக்கப்படும். 

கொரோனா பரவலுக்கு பிறகு உலக நாடுகளின் வரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்த போதும் ஜி 20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். 

அடுத்த 5 ஆண்டுகள் என்பது வளர்ச்சிக்கான காலமாக இருக்கும். மகளிர் இட ஒதுக்கீடு முத்தலாக் தடை போன்ற பெண்களுக்கான சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. நாட்டின் பண வீக்கம் கட்டுக்குள் இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Budget 2024 No change income tax rate 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->