பட்ஜெட் 2024: ஏழைகளுக்கு 2 கோடி வீடுகள்... சூரிய மின் தகடுகள் மூலம் மின்சாரம்! - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத்திற்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல், மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  

மருத்துவத்துறை தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரையின் சிறப்பு அம்சங்கள், எங்கள் அரசு பல மருத்துவ கல்லூரிகளை திறக்க உள்ளது. 

தற்போது உள்ள அனைத்து கல்லூரிகளும் மேம்படுத்தப்படும். இதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் எதிர்கால இந்தியாவிற்கு தேவைப்படும் மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இரண்டு கோடி வீடுகள் கட்டப்பட உள்ளது. அவ்வாறு கட்டப்படும் வீடுகளில் பதிக்கப்பட்டு 1 கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. 

அங்கன்வாடிகளுக்கு போஷன் 2.0 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கடந்த 2013-2014 இல் இருந்து மீன்வளத்துறைக்காக தனி துறை அமைக்கப்பட்டதில் கடல் உணவு ஏற்றுமதி இரட்டிப்பாகி உள்ளது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Budget 2024 2 Crore Houses Electrified Solar Panels


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->