ஆளில்லா பாகிஸ்தான் விமானம்! துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டிய எல்லைப் பாதுகாப்பு படையினர்.! 
                                    
                                    
                                   BSF shoots down Pakistan drone
 
                                 
                               
                                
                                      
                                            இந்திய பகுதியில் நுழைய முயன்ற ஆளில்லா பாகிஸ்தான் விமானத்தை எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் இருந்து இந்தியாவை நோக்கி நேற்று இரவு பாகிஸ்தானைச் சேர்ந்த ஆளில்லா விமானம் ட்ரோன் ஒன்று வருவதை கண்ட எல்லை பாதுகாப்பு படையினர் பல ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.
துப்பாக்கி சூடு நடத்தியதில் இந்த ஆளில்லா விமானம் பாகிஸ்தானை நோக்கி திரும்பி சென்றதாகவும், விமானம் வந்த பகுதி அனைத்திலும் விமானத்தில் இருந்து எந்த பொருளாவது வீசப்பட்டு உள்ளதா என்பதை உறுதிப்படுத்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாகவும் ஜம்பூ எல்லைப்புற பிஎஸ்எஃப் அதிகாரி தெரிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       BSF shoots down Pakistan drone