இழப்பீடு தொகையை பிரிப்பதில் தகராறு; தங்கையை கொன்று கை, கால்களை உடைத்து சாக்கு மூட்டையில் அடைத்த அண்ணன்; கோதுமை மூட்டை ஏமாற்றிய கொடூரம்..!
Brother kills sister and stuffs her in a sack over a dispute over sharing compensation
உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர் ராம் ஆசிஷ் நிஷாத் வயது 32. இவரது தங்கை நீலம் வயது 19. இவர்களுக்கு நிலம் கையகப்படுத்தியதில் அரசு வழங்கிய ரூ.6 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளது. இந்த நிதியை இருவருக்கும் பிரிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று இருவருக்கும் இடையே மீண்டும் பணத்தை பிரிப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அண்ணன் ராம் ஆசிஷ், துணியால் தங்கை நீலத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர், உடலை சாக்கு மூட்டையில் திணிப்பதற்காக கை, கால்களை உடைத்து, மூட்டையாக கட்டி தனது இருசக்கர வாகனத்தில் சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குஷிநகர் மாவட்டத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் உடலை வீசுவதற்காக சென்றுள்ளார். அப்போது வழியில் காவல்துறையினரின் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர்களிடம் 'சாக்கு மூட்டையில் கோதுமை இருப்பதாக கூறி தப்பிச் சென்றுள்ளார்.

இதனிடையே, குடும்பத்தினர் நீலத்தை காணாத நிலையில் அவர், சத் பூஜைக்காக சென்றிருக்கலாம் என்று கருதியுள்ளனர். மீண்டும் அவர் வராததால் அவரை தேடி வந்துள்ளனர். ராம் ஆசிஷ் பெரிய சாக்கு மூட்டையுடன் வீட்டை விட்டு வெளியேறியதை கண்ட அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடாத்தியுளள்ளார்.
அப்போது அவர் தனது தங்கையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நேற்றிரவு கரும்புத் தோட்டத்தில் இருந்து அழுகிய நிலையில் நீலத்தின் உடலை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ராம் ஆசிஷ் நிஷாத்தை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Brother kills sister and stuffs her in a sack over a dispute over sharing compensation