விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு 10.49 மணிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், டெல்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு ஒன்றை வைத்திருக்கிறேன் என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.

இதைக்கேட்டு அதிர்ந்து போன ஊழியர்கள், உடனே விமான நிலையத்தில் முழு அளவில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, விமான நிலையம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.

இதன் மூலம் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் வெறும் புரளி என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், தொலைபேசியில் அழைத்த எண்ணை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் குஷாக்ரா அகர்வால் என்பது தெரிய வந்தது.

உடனே போலீசார் டெல்லி ஜானக்புரி பகுதியில் பதுங்கியிருந்த அவரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் 12-வது வரை படித்திருப்பதும், பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த புரளியை பரப்பியதும் தெரிய வந்தது. இந்த மிரட்டல் சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bomb threat to delhi indra gandhi airport


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->