மகாராஷ்டிரா ஆட்சியை கவிழ்க்க நேரம் பார்த்து காத்திருக்கும் பாஜக?.. உத்தவ் தாக்கரே பரபரப்பு பேச்சு.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்கள் சந்திப்பில், " மராட்டிய மாநிலத்தில் சிவசேனா தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் காங்கிரஸ் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை அங்கம் வகிக்கின்றன. இந்த அரசானது மூன்று கட்சிகளின் அனுபவத்தை கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது. என்னுடைய தலைமையிலான அரசாங்கத்தின் எதிர்காலமானது எதிர்க்கட்சிகளின் கைகளில் இல்லை. 

முச்சக்கர வண்டியாக இந்த கூட்டணி உள்ளது. ஏழைகளுக்கான வாகனமாக இருக்கிறது. ஸ்டீயரிங் என்னுடைய கைகளில் சிக்கியுள்ளது. மற்ற இருவரும் எனது பின் அமர்ந்திருக்கின்றனர். பாஜகவிற்கு இந்த அரசை கவிழ்ப்பதில் இன்பம் கிடைக்கும் எனில் இப்போதே கவிழ்த்துவிடுங்கள். எதற்காக செப்டம்பர், அக்டோபர் வரை காத்திருக்க வேண்டும். ஆக்கபூர்வமான விஷயங்கள் செய்கையில் சிலர் இன்பம் அடைகின்றனர். ஆனால் சிலர் மற்றவர்களை அழிப்பதில் தான் இன்பம் அடைகின்றனர். 

மகா விகாஷ் அகாடி கூட்டணியானது ஜனநாயக கொள்கைக்கு எதிராக உருவாக்கப்பட்டது என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால், அதை நீங்கள் கவிழ்த்தால் ஜனநாயம் ஆகிவிடுமா? கொள்கையிலிருந்து நான் மாறவில்லை. ஒரு கூட்டணியில்தான் சேர்ந்து இருக்கின்றேன். இந்த கூட்டணி அரசியலில் காங்கிரஸ் புறக்கணிக்கப்படுவதாக உருவான பிரச்சனையானது, கூட்டணு கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் தீர்க்கப்பட்டது.

சரத்பவார் உடன் எனக்கு நல்ல ஒற்றுமை இருக்கின்றது. மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறேன் " என்று அவர் கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP try to make Coup in Maharashtra


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->