ஜெப்ரி எப்ஸ்டீன் நிதி வழங்கிய விழாவில் விருது வாங்கிய கபில் சிபல்: காங்கிரஸ் தலைமையிடம் விளக்கம் கேட்டுள்ள பாஜக..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள தொடர்பு குறித்து பாஜக குற்றம் சாட்டியுள்ளது.  அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தல், மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஜெப்ரி எப்ஸ்டீன் தண்டனை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் இருந்த நிலையில், தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது எப்ஸ்டீன் கோப்புகள் வெளியாகி உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச விருது வழங்கும் விழாவில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒன்றிய அரசில் அமைச்சராக இருந்த கபில் சிபல் கலந்து கொண்டார்.

அந்த விழாவிற்கு ஜெப்ரி எப்ஸ்டீன் நிதி வழங்கியதாக தற்போது புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி மற்றும் ஷெஷாத் பூனவல்லா ஆகியோர் சமூக வலைதளத்தில் ஆதாரங்களை நேற்று வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், இதுகுறித்தும், எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால், பாஜகவின் இந்த குற்றச்சாட்டுகளை கபில் சிபல் மறுத்துள்ளார். தற்போது மாநிலங்களவை சுயேச்சை உறுப்பினராக இருக்கும் கபில் சிபல், பாஜகவின் இந்த ஆதாரமற்ற புகார்கள் 'அர்த்தமற்றவை மற்றும் குப்பை' என்று தெரிவித்துள்ளார். 

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரா கூறுகையில், 'கல்வித் துறையில் உலகளாவிய ஒத்துழைப்பை உறுதி செய்ததற்காகவே கபில் சிபல் அந்த விழாவில் கௌரவிக்கப்பட்டார்' என விளக்கம் அளித்துள்ளார்.

இதேவேளை, பாஜக காட்டிய 59 பக்க ஆவணமானது எப்ஸ்டீன் கண்காணிக்க விரும்பிய பொது நிகழ்ச்சிகளின் தொகுப்பு மட்டுமே என்றும், இதில் மத்திய அமைச்சர் ஒருவரின் பெயரும் உள்ளதாகக் கூறி காங்கிரஸ் பதிலளித்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆனால், இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP seeks explanation from Congress leadership over Kapil Sibal receiving award at Jeffrey Epstein fund donation ceremony


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->