நாடு முழுவதும் செல்வாக்கு மிக்க பான் இந்தியா கட்சி பாஜக - பிரதமர் மோடி.!
BJP PAN India party PM Modi
பாஜக உலகின் மிகப்பெரிய கட்சியாகவும் மட்டுமில்லாமல் சிறந்த எதிர்காலம் கொண்ட கட்சியாக வளர்ந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தின் விரிவாக்க கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், பாஜக ஒரு சிறிய அரசியல் அமைப்பாக இருந்தது. உலகின் மிகப்பெரிய அமைப்பாக உயர்ந்ததற்கு தொண்டர்களின் கடின உழைப்பும் தியாகமும் தான் காரணம்.
பாஜக தனது அரசியல் பயணத்தை வெறும் 2 மக்களவை உறுப்பினர்களுடன் தொடங்கியது. ஆனால், தற்போது பல மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

சிலரின் குடும்பங்களால் இயக்கப்படும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் தான் இந்திய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. நாடு முழுவதும் செல்வாக்கு உள்ள ஒரே கட்சி பாஜக தான்.
பான் இந்தியா அளவில் உலகின் சிறந்த கட்சியாக மட்டுமின்றி, சிறந்த எதிர்காலம் கொண்ட கட்சியாகவும் வளர்ந்துள்ளது. மேலும் நவீன மற்றும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் குறிக்கோள் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
BJP PAN India party PM Modi