ரூ.2000 நோட்டு செல்லாதா.? பாஜக எம்.பி.. நாடாளுமன்றத்தில் விளக்கம் கேட்பு.!  - Seithipunal
Seithipunal


இந்த வாரம் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியது. இன்று மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் பாஜக எம்பியான சுஷில் மோடி பேசிய போது, "நாட்டில் இருக்கும் பல ஏடிஎம்களில் 2000 ரூபாய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் விரைவில் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று வதந்திகள் பரவி வருகின்றன. 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் பணியை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டதால் இது குறித்து மத்திய அரசு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்திவிட்டு 2000 ரூபாய் நோட்டு கொண்டு வந்தது அர்த்தம் அற்றதாக இருக்கிறது. பல வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் அதிக மதிப்பிலான பணமானது புழக்கத்தில் இருப்பதில்லை.

அத்துடன் 2000 ரூபாய் நோட்டுகள் எளிதில் பதுக்கி வைக்கவும், பண மோசடி போன்ற சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது இது கருப்பு பணத்திற்கு ஈடானதாக மாறியுள்ளது. எனவே, படிப்படியாக இந்த 2000 ரூபாய் நோட்டின் புழக்கத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மக்கள் தங்கள் பணத்தை மாற்றிக் கொள்ள இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MP ask about 2000 rs Value 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->