வாக்குறுதி நிறைவேற்றிய பா.ஜ.க அரசு: ஹோலி, தீபாவளியில் இலவச சிலிண்டர் வழங்கல்...!
BJP government fulfills promise Free cylinders provided during Holi and Diwali
டெல்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ.க. அரசு, பண்டிகை காலத்தை மக்களுக்கு பொருளாதார நிம்மதியாக மாற்றும் வகையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சட்டசபை தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியை செயல்படுத்தும் நோக்கில், ஹோலி மற்றும் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று அரசு உறுதி செய்துள்ளது.

இதற்காக, தகுதி வாய்ந்த பயனாளிகளின் வங்கி கணக்கில் ஒரு சிலிண்டருக்கான ரூ.853 நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும், குழாய் வழி (PNG) கியாஸ் பயன்படுத்தும் குடும்பங்களும் இந்த நலத்திட்டத்தின் பயனை பெறுவார்கள் என்று முதல்வர் தெரிவித்தார்.
இந்த மக்கள் நல திட்டத்தை செயல்படுத்த மொத்தம் ரூ.242 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் சமையல் செலவை குறைத்து மக்களின் சுமையை தளர்த்தும் இந்த அறிவிப்பு, டெல்லி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
English Summary
BJP government fulfills promise Free cylinders provided during Holi and Diwali