மேற்கு வங்கத்தில் பாஜக பெண் வேட்பாளரை நிர்வாணமாக இழுத்துச் சென்ற கொடூரம்!! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க மாநிலத்தில் கடந்த ஜூலை 8ம் தேதி நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் உடல் ரீதியாக தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக பாஜகவை சேர்ந்த கிராமசபை பெண் வேட்பாளர் ஒருவர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பஞ்சாயத்து தேர்தல் நாளில் திரிணாமுல் குண்டர்கள் தன்னை நிர்வாணமாக்கி ஊர் முழுவதும் ஊர்வலமாகச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள பஞ்ச்லா காவல் நிலையத்திற்கு உட்பட்ட தக்ஷின் பஞ்ச்லாவில் நடந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பாஜக பெண் வேட்பாளர் அளித்த புகாரின் பேரில் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முதல் தகவல் அறிக்கையில் "மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற வாக்குப்பதிவு நாளில் (ஜூலை 8, 2023) வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது அதே கிராம சபையின் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஹேமந்தா ராய் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆல்ஃபி ஸ்கே, சுகமல் பஞ்சா, ரணபீர் பஞ்சா, சஞ்சு தாஸ், நூர் ஆலம் மற்றும் சுமார் 40-50 பேர் என் மார்பில் சரமாரியாக தாக்கினர்.

என்னை வாக்குச் சாவடியிலிருந்து வெளியே தள்ளினார்கள். இவர்களில் சிலர் என்னை அடிக்கும் போது ஹிமந்தா ராய், அலி ஷேக் மற்றும் சுகமல் பாஞ்சாவை என் புடவை மற்றும் உள் ஆடையை கிழித்தனர். மேலும் என்னைத் தாக்கி நிர்வாணமாக்கி மற்றவர்கள் முன்னிலையில் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்" என காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பட்டியலின பெண்கள் இரண்டு பேர் நிர்வாணமாக்கி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதேபோன்ற சம்பவம் மேற்கு வங்கத்திலும் நடந்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP female candidate was dragged naked In West Bengal


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->