முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உலக ஐயப்பன் சங்கமம் மாநாடுக்கு அழைப்பு: 'ஹிட்லர் யூதர்களை கொண்டாடுவதும், ஒசாமா பின் லேடன் சமாதானத்தின் தூதராக மாறுவது போன்றது:' பாஜ மாநில தலைவர் கண்டனம்..!
BJP condemns Kerala government for inviting Chief Minister Stalin to the World Ayyappa Sangam conference
உலக ஐயப்பன் சங்கமம் மாநாடு தமிழக முதல்வர் ஸ்டாலினை கேரளா அரசு அழைப்பு விடுத்துள்ளமைக்கு பாஜ கடும் எதிர்ப்பும், விமர்சனத்தையும் முன் வைத்துள்ளது.
உலக ஐயப்பன் சங்கமம் மாநாடு பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. திருவாங்கூர் தேவஸ்தானமும், கேரள அரசும் இணைந்து நடத்ததும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, தமிழக முதல்வர் ஸ்டாலினை கேரள அமைச்சர் வாசவன் அண்மையில் அழைப்பு விடுத்தார்.
இது குறித்து பாஜ மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''சபரிமலை பாரம்பரியத்தையும், ஐயப்ப பக்தர்களையும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவமதித்துள்ளார். ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தின் நம்பிக்கையையும் அவமதித்தவர்கள். ஹிந்துக்களையும் இந்து நம்பிக்கையையும் அவமதித்த பிறகு, இப்போது தேர்தலுக்காக ஐயப்பனைத் தேடி வந்துள்ளனர். இந்த செயல் அனைத்தும் ஓட்டு வங்கிக்காக மட்டும் தான்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக போன்ற இண்டி கூட்டணி கட்சிகள் சபரிமலை நிகழ்ச்சிக்கு செல்வது, ஹிட்லர் யூதர்களை கொண்டாடுவது போன்றது. ஒசாமா பின் லேடன் சமாதானத்தின் தூதராக மாறுவது போன்றது. இது தேர்தல் நேரத்தில் மக்களை முட்டாளாக்கும் செயல் என்று கேரள மற்றும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால் மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்; இண்டி கூட்டணியினர் ஹிந்து மத நம்பிக்கையாளர்களுக்கு சொன்னதையும், செய்ததையும் மறக்க மாட்டார்கள்.'' என்று அறிக்கையில்
English Summary
BJP condemns Kerala government for inviting Chief Minister Stalin to the World Ayyappa Sangam conference