இந்தியா: வாங்கி கடனுக்காக பெற்ற மகனை ரூ.9,000-க்கு விற்ற தாய்! - Seithipunal
Seithipunal


பிகாரின் அராரியா மாவட்டத்தில், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால், பெண் ஒருவர் தனது ஒருவயது மகனை விற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பச்சிரா கிராமத்தைச் சேர்ந்த முகமது ஹரூன் மற்றும் ரெஹானா கட்டூன் தம்பதி, வறுமை காரணமாக தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 50,000 கடன் பெற்றிருந்தனர்.

இந்த கடனின் தவணையை செலுத்த முடியாததால் ரெஹானா, தன் குழந்தையை ரூ. 9,000-க்கு விற்றதாக கூறியுள்ளார்.

"கடன் தவணை நிலுவையில் இருப்பதால் தனியார் நிதி நிறுவனம் அழுத்தம் கொடுத்து, வழக்கு தொடுப்பதாக மிரட்டியது. இதனால் கடனை திருப்பிச் செலுத்த, என் சகோதரர் தன்வீர் குழந்தையை விற்க முன்மொழிந்தார்," என ரெஹானா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இந்த தம்பதியிடம் 8 குழந்தைகள் உள்ளன; இதில் குர்ஃபான் என்ற ஒன்றரை வயது குழந்தையே தற்போது விற்கப்பட்டது தெரியவந்துள்ளது.

முகமது ஆரிஃப் என்பவருக்கு குழந்தை ரூ. 9,000-க்கு விற்கப்பட்டு, முகமது ஆரிஃப் அந்த குழந்தையை தனது உறவினர் ஒருவருக்கு ரூ. 45,000 விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் குழந்தையை ஆரிஃப் வீட்டில் இருந்து மீட்டு, குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைத்து உள்ளனர். மேலும், முகமது ஹரூன் மற்றும் ரெஹானா கட்டூன் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bihar Mother sale own son for bank credit


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->