கட்டுமானப்பணியில் அரங்கேறிய விபத்து.. 3 குழந்தைகள் பலியான பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பீகார் மாநிலத்தின் தலைநகராக இருக்கும் பாட்னாவில் உள்ள ஜவகர்லால் நேரு சாலை பகுதியில் கட்டுமான பணிகளானது நடைபெற்று கொண்டு இருந்தது. இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல பணி துவங்கியுள்ளது. 

இந்த பணியின் போது, சிலாப் திடீரென இடிந்து விழவே, சிலாப்பின் கீழே இருந்த மூன்று குழந்தைகளும் பரிதாபமாக உள்ளேயே சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு குழந்தைகளை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாது, குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அம்மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், நேரடியாக சென்று குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 இலட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக தெரிவித்தார். கட்டுமான பணி விபத்தில் மூன்று குழந்தைகள் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bihar 3 Child died Bridge Construction accident


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->