திருமணத்திற்கு முன்பு நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமாகாது - உயர்நீதிமன்றம் அதிரடி.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 2012ம் ஆண்டு பெண் ஒருவர், தனது கணவ்ர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் "தனது கணவர் செய்த கொடுமையால் திருமண வாழ்க்கை முற்றிலுமாக சிதைந்துவிட்டது. தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வன்முறைக்கு உட்படுத்தினார்.

அதுமட்டுமல்லாமல், தன்னை இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபடுத்தியதால், அந்தரங்க உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்திருந்தார்.இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த வழக்கை குடும்ப நீதிமன்றம் விசாரணை செய்து அந்த பெண்ணின் கணவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, "இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஐபிசி பிரிவு 377-ன் கீழ் தண்டிக்க முடியாது. மேலும் இந்த நாட்டில் திருமண பலாத்காரம் இன்னும் குற்றமாக்கப்படவில்லை என்றுத் தெரிவித்தனர்.

திருமணத்திற்கு முன்பு நடக்கும் பாலியல் வன்கொடுமையை குற்றமாக்கக் கோரும் மனுக்கள் இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மனைவிக்கு பதினெட்டு வயது அல்லது அதற்கு மேல் இருக்கும் போது, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு குற்றவியல் தண்டனை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

before marriage sexual harassment not crime high court order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->