இந்திய- வங்கேச எல்லையில் அதிர்ச்சி; தேயிலை விவசாயி ஒருவரை சிறைபிடித்து சென்றுள்ள வங்கதேசத்தினர்; ஊடுருவல்காரருக்காக டிமாண்ட்.. !
Bangladeshis hold tea farmer captive on India and Bangladesh border
மேற்குவங்க மாநிலத்தில், ஜல்பைகுரி மாவட்டம், தசார் பாரா கிராமத்தைச் சேர்ந்த தேயிலை விவசாயி ஒருவர் வங்கதேசத்தினரால் சிறைபிடித்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபங்கர் கோபே என்ற நபர், 2 நாட்களுக்கு முன்பு சவுல்ஹாட்டி எல்லை வேலியில் இருந்து 150 அடி தூரத்தில் தனது தேயிலைத் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சுமார் 20 பேர் கொண்ட கும்பல் அவரை சிறைப்பிடித்துச் சென்றுள்ளது.
குறித்த கும்பல், கோபேவை சர்வதேச எல்லையைத் தாண்டி வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு 02 நாட்களுக்கு முன்னர், சவுல்ஹாட்டி எல்லைப் பகுதியில் கம்பி வேலியை வெட்டி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்கதேச நபர் ஒருவரை, எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சிறை பிடித்துள்ளனர்.

இதற்கு பழிவாங்கும் வகையிலேயே கோபே கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கோபே பேசுவது போன்ற ஒரு வீடியோ வெளியாகி தற்போது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அந்த வீடியோவில் 'வங்கதேசத்தைச் சேர்ந்த ஊடுருவல்காரர் தமிஸ் உத்தீனை இந்தியா விடுவித்தால், தானும் விடுவிக்கப்படுவேன் 'என்று பேசியுள்ளார். இதனையடுத்து கோபேவை விடுவிக்க எல்லைப் பாதுகாப்பு படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் இந்தியா-வங்கதேச எல்லையோர கிராமங்களில் அச்சம் நிலவுகிறது.
English Summary
Bangladeshis hold tea farmer captive on India and Bangladesh border