பெங்களூர்: இளம் பெண் துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைக்கப்பட்ட கொடூர சம்பவம்! - Seithipunal
Seithipunal


நேபாள் நாட்டைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண், பெங்களூரில் தனது மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி மற்றும் அவரது கணவருக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவனைப் பிரிந்து வேறு பகுதியில் வீடு எடுத்து மகாலட்சுமி வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை அந்த வீட்டிலிருந்து அதிகளவு துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கிருந்த குளிர்சாதன பெட்டியில் மகாலட்சுமியின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு உள்ளே அழுகிய நிலையில் இருந்துள்ளது. உடலின் பாகங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வெளியான முதல் கட்ட தகவலின் படி, கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பே மகாலட்சுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும், அந்த பகுதிகள் தொடர் மின்வெட்டு இருந்த காரணத்தினால் குளிர்சாதன பெட்டி இயங்காமல் உடல் அழுகி துர்நாற்றம் வீசியதால் இந்த விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. 

கொலை செய்த அந்த சைக்கோ கொலைகாரன் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர்.

சுமார் ஐந்து தனிப்படைகளை அமைத்து போலீசார் தற்போது தேர்தல் வேட்டையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் பெங்களூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangalore Nepal lady brutal murder freezer box


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->