பாலத்தில் நின்று பணமழை பெய்த நபர்.. சினிமா பாணியில் அரங்கேறிய மிரளவைக்கும் சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


பெங்களூர் சிட்டியின் கே.ஆர்.சந்தையின் மேம்பாலத்திற்கு கீழே சென்று கொண்டிருந்த நபர்களுக்கு திடீரென்று பணமழை பெய்த காரணத்தால் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டுள்ளது. 

மேம்பாலத்திற்கு மேலே கோட் சூட் அணிந்தபடி ஒரு நபர் தனது கழுத்தில் கடிகாரத்தை கட்டி தொங்க விட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்தார். அவர் கையில் ஒரு பை நிறைய 10 ரூபாய் நோட்டுகள் கொண்ட பணக்கட்டுகளை வைத்திருந்தார். 

அதன்பின் அந்த பணத்தை அவர் பாலத்திற்கு கீழே அள்ளி வீசத் துவங்கினார். இதை பார்த்த கீழே நின்ற வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்கள் அடித்துப் பிடித்து அங்கும் இங்கும் ஓடி அந்த பணத்தை பொறுக்க ஆரம்பித்தார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

தான் கையில் வைத்திருந்த பணம் முழுதும் காலியான பின் அந்த நபர் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார். அவர் சென்ற பின்னும் கூட கூட்ட நெரிசல் சரியாகவில்லை. அவர் யார் எதற்காக இப்படி செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bangalore Men Did Money Rain


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->