பெங்களூர் | சிறைச்சாலையில் தீவிரவாதி நசீர் மீது தாக்குதல்! விசாரணை கைதிகளிடம் தீவிர விசாரணை! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில், வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் தீவிரவாதி நசீர் மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர் நகரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக, சையத் சோஹைல் (24), உமர் (29), ஜுனைத் (30), முதாஷிர் (28), ஜாஹித் (25) ஆகிய 5 பேரை, கடந்த 18ஆம் தேதி  மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர்.

மேலும் இவர்கள் ஐந்து பேரையும் ஏழு நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மத்திய சிறை வளாகத்தில் தீவிரவாதி நசீரை, இரண்டு விசாரணை கைதிகள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த நசீருக்கு சிறை மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நசீரை தாக்கிய இரண்டு விசாரணை கைதிகளையும் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள 5 தீவிரவாதிகள் இடமிருந்து 12 செல்போன்கள், 3 மடிக்கணினிகள், 5 வாக்கி டாக்கி, 7 துப்பாக்கிகள், 45 தோட்டாக்கள், 4 கையெறி குண்டுகள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்கள், கத்திகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்த தீவிரவாதி டி.நசீர், 2008-ம் நடந்த பெங்களூரு வெடிகுண்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangalore Central Prison case issue


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->