அப்பா.. அங்க கொரோனா வந்துருச்சு.. பத்திரமா இருப்பா... குழந்தையின் கண்ணீர் ஆடியோ..!! - Seithipunal
Seithipunal


உலக நாடுகளை கரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், அரசு அதிகாரிகள் என இரவு பகலாக போராடி வருகின்றனர். தங்களின் குடும்பத்தினரையும் மறந்து கடமையை செய்து வரும் நிலையில், குழந்தைகளையும் அவர்களின் பரிதவிப்பையும் தவிக்கவிட்டு பணியாற்றி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள அகரிபொம்மனஹள்ளி தாலுகா கிராமத்தை சார்ந்த செவிலியர் தனது நான்கு வயது மகளை பிரிந்து கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றி வருகிறார். 

தனது மகளை பிரிந்து இருந்த நிலையில், மகள் தாயை காண பாச போராட்டத்தை நடத்தியுள்ளார். சுமார் 40 நாட்களுக்கு பின்னர் சிறுமியும் தாயும் சந்தித்துள்ளனர். 
இதனைப்போல பல்லாரி அருகேயுள்ள குடிதினி கிராம பகுதியை சார்ந்தவர் பிக்கப்பா ரெட்டி. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், இவர் 45 நாட்களுக்கும் மேலாக தனது குடும்பத்தை பிரிந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். 

இவரை காண இயலாத இவரின் இளைய மகள் ரோஜர், தந்தையை காண இயலாது தேம்பி தேம்பி கண்ணீர் வடித்துள்ள நிலையில், வீடியோ கால் மூலமாக தந்தையிடம் பேசியுள்ளார். இது குறித்த உரையாடல் ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிரியாது.

இது குறித்த உரையாடலில், அப்பா பல்லாரி பகுதியில் கொரோனா வந்துவிட்டது.. எங்கும் செல்ல வேண்டாம்.. அலுவலகத்தில் இருங்கள் என்று மழலை குரலில் தேம்பி தேம்பி அழவே, சமாதானம் செய்ய தந்தையும் நீங்கள் கவனமாக இருங்கள் என்று கூறியுள்ளார். தந்தையை காண இயலாத சிறுமி, தந்தையின் உடல்நலத்தை எண்ணி வருந்தி வருகிறார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baby cry about father health status works govt employee in Karnataka


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal