அயோத்தி விமான நிலையத்தின் பெயர் இதுவா? பிரதமர் திறப்பு! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம், விரைவு படுத்தப்பட்ட சாலைகள் போன்றவற்றை பிரதமர் நாளை திறந்து வைக்க உள்ளார். 

இது குறித்து பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, ரூ. 11100 கோடி மதிப்பில் அயோத்தி நகரில் பணி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பதோடு மட்டுமல்லாமல் புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். 

இதுபோல் உத்தர பிரதேசத்தில் இதர பகுதிகளில் ரூ. 4600 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது. அயோத்தியின் வளமான பராமரிப்பு மற்றும் வரலாறு மாறாமல் உலக தரத்தில் உள்கட்டமைப்புகள் உருவாக்குவதும் குடிமை வசதிகளை மறுசீரமைப்பது போக்குவரத்து வசதி பிரதமரின் தொலைநோக்கு பார்வையாகும். 

அயோத்தியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தை நாளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். 

இந்த விமான நிலையத்திற்கு ராமாயணம் எழுதிய 'வால்மீகி' பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது போல் அயோத்தி கோவில் சந்திப்பு என்ற பெயருடன் மேம்படுத்தப்பட்டுள்ள அயோத்தி ரயில் நிலையத்தையும் கோயம்புத்தூர், பெங்களூர் இடையிலான வந்தே பாரத் உட்பட 6 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளையும் பிரதமர் நாளை தொடங்கி வைக்க உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayodhya airport named update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->