குழந்தை கழுத்தில் கத்தி.. பெண்ணை மிரட்டி திருமணம்.. நண்பர்களுக்கு விருந்தாக்கிய காமுக கொடூரன்.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தை சார்ந்த கர்ப்பிணி பெண்மணி, தனது மூன்று வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று பெண்மணி தனது மகளுடன் இரவின் போது அருகேயுள்ள கடைக்கு சென்றுள்ளார். 

இந்த சமயத்தில், அதே ஊரை சார்ந்த ஒருவன் பெண்மணியையும், அவரது மூன்று வயது பச்சிளம் குழந்தையையும் கடத்தியுள்ளான். இதனையடுத்து இருவரையும் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காற்வீர் பகுதிக்கு கடத்தி சென்றுள்ளான். 

பின்னர், அங்கு பெண்ணிற்கு தாலிகட்டி மனைவியாக்கிய நிலையில், பெண் எதிர்ப்பு தெரிவிக்கையில் அவரது 3 வயது குழந்தையை கொலை செய்வதாக மிரட்டியுள்ளான். குழந்தையின் உயிரை நினைத்த பெண்மணி தனது கழுத்தையும் நீட்டியுள்ளார். 

இந்நிலையில், காமுகன் அவனது நண்பர்கள் என்று கூறி இரண்டு பேரை அழைத்து வந்து, உல்லாசமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளான். இந்த விஷயத்திற்கு பெண்மணி மறுப்பு தெரிவிக்கவே, அவரது 3 வயது குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். 

இதன்பின்னர் பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், அனைவரும் உறங்கிய பின்னர் பெண்மணி குழந்தையுடன் தப்பி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Assam girl Kidnapped and forced marriage sexual abuse police arrest culprit


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->