அரவிந்த் கேஜரிவால் கைது எதிரொலி: பிரதமர் இல்லத்தை நோக்கி படையெடுத்த ஆம் ஆத்மி கட்சியினர்.!
Arvind Kejriwal arrest Aam Aadmi Party protest
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாகத்துறை காவலில் எடுத்து மார்ச் 28ஆம் தேதி வரை விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சமூக வலைதளத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று ஆம் ஆத்மி கட்சியினர் பிரதமர் நிலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனால் பிரதமர் இல்லத்தைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு போராட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை என டெல்லி போலீசார் தெரிவித்துள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Arvind Kejriwal arrest Aam Aadmi Party protest