இந்தியாவில் தற்காலிக முழு ஊரடங்கு.?! அமெரிக்க தலைமை மருத்துவரின் அவசிய ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


 இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து இருக்கிறது. முதல் அலையை விட கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று, ஒரே நாளில் 3573 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் பொதுமக்களும், ஆட்சியில் இருப்பவர்களும் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். 

இத்தகைய சூழலில், அமெரிக்க அரசின் தலைமை மருத்துவர் அந்தோணி ஃபவுசி இந்தியாவில் முழு ஊரடங்கு அமல் படுத்துவது தான் இதற்கு தீர்வு என்று ஆலோசனை தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்த அவர் இந்தியா தற்போது கடுமையான மற்றும் நம்பிக்கையற்ற சூழலில் இருக்கிறது. எனவே, நாடு முழுவதும் தற்காலிக முழு ஊரடங்கு அமல் படுத்தவேண்டும். 

Breaking: கொரோனா தடுப்பூசி விநியோகம் - பிரதமர் மோடி பேச்சு.! - Seithipunal

தேவையான அளவு ஆக்சிஜன் மற்றும் மருந்துப் பொருட்களை பெற்று அதை உடனடியாக மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். சீனாவில் பரவிய உடனே அங்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டதால், தான் கட்டுப்படுத்த முடிந்தது. 

அதுபோல, தற்போது அவசரமாக ஊரடங்கை அமல் படுத்தவேண்டும். கடந்த முறை போல மாதக்கணக்கில் ஊரடங்கு நீடிக்காமல், தற்காலிகமாக முழு ஊரடங்கு பிறப்பிப்பது அவசியம். என்று அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் சீனாவை போல அவசரகால மையங்கள், தற்காலிக மருத்துவமனைகளை இந்தியாவும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார். இத்தகைய சூழலில், ராணுவத்தின் மூலமாக தேவையான உதவிகளை பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

தொற்றிலிருந்து வெற்றி பெற்றுவிட்டோம் என்று இந்தியா முன்னதாகவே அறிவித்து விட்டதாகவும், விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anthoni fousi speech about corona affect in india


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal