நீட் மறு தேர்வில் மீண்டும் ஒரு குளறுபடி...! ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய முடியாமல் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் தவிப்பு...! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நீட் மறு தேர்வுக்கு தயாராகி வரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஹால் டிக்கெட் பதிவிறக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முயன்றபோது, இணையப்பக்கம் திறக்காதது, செயல்முறை பாதியிலேயே முடங்குவது, திடீரென சேவை துண்டிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதாக தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால் பலர் நீண்ட நேரம் காத்திருந்தும் ஹால் டிக்கெட்டை பெற முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.இந்த திடீர் தொழில்நுட்ப தடங்கல் குறித்து விளக்கம் அளித்துள்ள தேசிய தேர்வு முகமை, சேவையகத்தில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் மற்றும் மென்பொருள் சார்ந்த சிக்கல்களை சரிசெய்ய நிபுணர் குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும், தொழில்நுட்ப குறைபாடுகளை முழுமையாக களைந்து, ஹால் டிக்கெட் பதிவிறக்க சேவையை வழக்கமான நிலைக்கு கொண்டு வர அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விரைவில் அனைத்து தேர்வர்களும் எந்தவித தடையும் இன்றி தங்களது அனுமதி சீட்டுகளை பெற முடியும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, இதுவரை சுமார் 4 லட்சம் தேர்வர்கள் வெற்றிகரமாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

எனவே மீதமுள்ள தேர்வர்கள் பதற்றமோ அச்சமோ அடைய தேவையில்லை என்றும், தொழில்நுட்ப சிக்கல்கள் விரைவில் முழுமையாக சரிசெய்யப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேசியத் தேர்வுக்கு முன்பாக ஏற்பட்டுள்ள இந்த இணையதள தடங்கல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிக்கலை உடனடியாக தீர்க்க அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Another glitch NEET re examination Thousands candidates struggling download hall ticket


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->