மூன்று ஆண்டுகளாக வீட்டுவாடைகை தராமல் ஏமாற்றி வந்த எம்.பி. கோரண்ட்லா.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள, சத்திய சாய் மாவட்டத்தில் அனந்தபுரம் ராம் நகரை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன் ரெட்டி. இவர் அந்தப்பகுதியில் உள்ள 80 அடி சாலையில் இரண்டு அடுக்கு மாடியில் வீடு ஒன்றை கட்டி வாழ்ந்து வந்தார்.அதேபகுதியில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் இந்துபுரம் தொகுதி எம்.பியாக இருப்பவர் கோரண்ட்லா மாதவ். இவர் மல்லிகார்ஜுன் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு அவர் மல்லிகார்ஜுனிடம், தன்னை சந்திப்பதற்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தினமும் அதிக அளவில் வருவார்கள். இதற்காக உங்களது வீட்டை எனக்கு வாடகைக்கு தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்ற மல்லிகார்ஜுன் தனது வீட்டை மற்றொரு இடத்திற்கு மாற்றிக் கொண்டு தனது வீட்டை கோரண்ட்லாவிற்கு வாடகைக்கு கொடுத்தார். 

ஆனால், கோரண்ட்லா கடந்த 3 ஆண்டுகளாக வீட்டு வாடகை, மின்சார கட்டணம் என்று எதையும் செலுத்தவில்லை. இதனால், மல்லிகார்ஜுன் ரெட்டி கோரண்ட்லாவிடம் சென்று வாடகை பாக்கியைக் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு கோரண்ட்லா பின்னர் தருவதாக கூறி காலம் தாழ்த்தி வந்தார். 

இது குறித்து மல்லிகார்ஜுன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் மல்லிகார்ஜுன் தெரிவித்ததாவது, "கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வரும் மாதவ் எம்.பி வாடகையாக ரூ.13 லட்சமும், மின்சார கட்டணமாக ரூ 2,50,413 கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, போலீசார் மல்லிகார்ஜுன் புகாரை ஏற்று கோரண்ட்லா மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பின்னர் மல்லிகார்ஜுன் பத்து பேருடன் மீண்டும் கோரண்ட்லா எம்.பி.யிடம் சென்று வாடகை பாக்கியை கேட்டுள்ளார். ஆனால், கோரண்ட்லா கோபத்தில் மல்லிகார்ஜுன் பத்து பேருடன் வந்து தன்னை தாக்க வந்ததாக போலிசில் புகாரளித்தார்.

இந்த புகாரின் பேரில் தலைமை காவலர் சிவ ராமலு, ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் மல்லிகார்ஜுன் ரெட்டி மீது மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். மேலும், மாதவ் எம்.பி ஏற்கனவே ஒரு பெண்ணிற்கு வீடியோ காலில் நிர்வாணமாக நின்று பேசிய வழக்கில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andira mp gorantla cheated by house rent


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->