தாமரை சின்னத்தில் படுத்து தேம்பி தேம்பி அழுத பாஜக எம்.பி.! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பூபதி ராஜு சீனிவாச வர்மா கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க மேல் சபை எம்.பி. ஆக தேர்வு செய்யப்பட்டார். 

வருகின்ற தேர்தலில் நரசபுரம் தொகுதியில் போட்டியிட சீனிவாச வர்மா வேட்பு மனு அளித்திருந்த நிலையில் பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்த சீனிவாச வர்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் உணர்ச்சி வசப்பட்டு கட்சி அலுவலகத்தில் இருந்த பா.ஜ.க தாமரை சின்னத்தின் மீது கட்டிப்பிடித்து படுத்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுதார். 

இதனை பார்த்த அவரது ஆதரவாளர்கள் 'பா.ஜ.க வாழ்க' என கோஷம் எழுப்பினர். பிறகு உணர்ச்சிவசப்பட்ட எம்.பியை ஆதரவாளர்கள் தூக்கி சமாதானம் செய்தனர். 

30 ஆண்டு காலமாக பா.ஜ.கவில் இருந்து உழைத்ததற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சீனிவாச வர்மா தெரிவித்துள்ளார். 

சீனிவாச வர்மா எம்.பி. தாமரை சின்னத்தில் படுத்தபடி அழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பா.ஜ.க தொண்டர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Andhra bjp MP emotional


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->