அம்பன் புயல் சேதம்.. ரூ.1000 கோடி உடனடி நிவாரணம் அறிவித்த பிரதமர்.!! - Seithipunal
Seithipunal


தெற்கு வங்க கடலில் உருவான அம்பன் புயலானது நேற்று மதியம் 2.30 மணி அளவில் மேற்குவங்காளத்தில் திகா கடற்கரை மற்றும் வங்கதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியை ஒட்டி கரையை கடக்க தொடங்கியது.

முன்பகுதி, நடுப்பகுதி, பின்னர் கடைசி பகுதியான மாலை 3.30 மணி முதல் 5.30  வரை அம்பன் புயல் முழுவதும் கரையை கடந்தது. அம்பன் புயல் பாதிப்பு மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரில் உள்ள பல தெருக்களில் வெள்ளம் மழை நீர் புகுந்து காணப்பட்டது. கடுமையான காற்று மற்றும் கனமழையால் வீடுகள் சேதமடைந்தன. வாகனங்கள் மற்றும் வீடுகளின் மேற்கூரைகள் மீது மரங்கள் விழுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புயலுக்கு தற்போது வரை 74 க்கும் அதிகமானோர் பரிதாபமாக பலியாகினர். இந்நிலையில், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலத்தை புரட்டியெடுத்த அம்பன் புயல் சேதத்தை நேரில் காண பிரதமர் மோடி இன்று கொல்கத்தாவுக்கு பயணம் செய்தார். இதில் புயலால் ஏற்பட்ட சேதத்தை ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்ட நிலையில், ரூ.1000 கோடி அம்மாநிலத்திற்கு உடனடியாக விடுவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

மேலும், புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களுக்கு இரங்கலை தெரிவித்த பிரதமர் மோடி, ரூ.1000 கோடி அம்பன் நிவாரண தொகை உடனடியாக ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம் நிதிஉதவி மற்றும் காயமடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amphan Cyclone PM announce relief fund 1000 crore for west bengal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal