இந்தியா என்ன செய்யும்?.. நமது திருப்பம் உலக நாடுகளை திருப்பியது - அமித் ஷா.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கு வைத்து, சி.ஆர்.பி.எப் வீரர்கள் இன்று மரக்கன்றுகளை நட்டனர். ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் கதர்ப்பூர் சி.ஆர்.பி.எப் வீரர்களை நேரில் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மரக்கன்றுகளை நட்டார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். 

இந்த உரையில், " இந்தியா அதிக மக்கள் தொகையை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா எப்படி? போரிடும் என்று அனைவரும் எண்ணினார்கள். இதனால் பல அச்சமும் எழுந்தது. கொரோனாவிற்கு எதிரான போரில் இந்தியா திறம்பட செயல்பட்டு வருகிறது என்பதை உலகம் முழுவதும் இப்போது கவனித்து வருகிறது.

கொரோனாவிற்கு எதிரான போரில் பாதுகாப்பு படையினர் மிகப்பெரிய பங்குகளை கொண்டுள்ளனர். இதனை யாராலும் மறுக்க இயலாது. பாதுகாப்பு படையினர் பயங்கரவாதத்திற்கு எதிராக மட்டும் போரிடாமல், மக்களுக்கான உதவியையும் செய்து வருகின்றனர். அவர்களுக்கு எனது வணக்கத்தை செலுத்துகிறேன்.

இந்திய பாதுகாப்பு படையினரின் தியாகம் என்றும் வீணாகாது. மனித இனத்தின் போராட்ட வரலாறு எழுதுகையில், இந்திய பாதுகாப்பு படையின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். இந்த மரங்களை ஜவான்கள் நல்ல முறையில் கவனித்துக்கொள்ள வேண்டும். மரங்கள் நீண்ட ஆயுளை கொண்டவை. நமது எதிர்கால சந்ததிக்கும் இது உதவும் என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amith Shah speech about india corona virus treatment


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal