இவர்கள் எல்லாம் ஏழைகளின் நலனை நினைத்துப் பார்ப்பார்களா.? அமித்ஷா சரமாரி கேள்வி! - Seithipunal
Seithipunal



டெல்லியில் பா.ஜ.க தேசிய கவுன்சில் கூட்டம் இரண்டு நாள் நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த நிகழ்வில் பேசிய மத்திய உள்துறை அமித் ஷா, அரசியலில் இந்திய கூட்டணி நோக்கம் என்ன, பிரதமர் மோடி இந்தியாவை சுயசார்பான நாடாக உருவாக்கும் இலக்கில் உள்ளார். 

சோனியா காந்தி தன் மகன் ராகுல் காந்தியை பிரதமராக்குவதில் குறிக்கோளாக கொண்டுள்ளார். சரத் பவார் தனது மகளை முதல்வர் ஆக்குவதில் கவனம் செலுத்துகிறார்.

 

மம்தா பானர்ஜி தன் மருமகனையும், மு.க. ஸ்டாலின், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் தனது மகன்களை முதல்வராக திட்டம் தீட்டுகின்றனர். 

குடும்பத்திற்காக ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்கள் என்றாவது ஏழைகளின் நலனை நினைத்துப் பார்ப்பார்களா, ஏழைகளின் நலனை பற்றி சிந்திப்பார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah speech


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->