வங்கிகள் இன்று வழக்கம் போல் செயல்படும்.. ஊழியர்களின் வேலைநிறுத்தம் திடீர் வாபஸ்.!
All india Bank strike cancelled
வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் திடீர் வாபஸ்.
வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பதாகவும், இரு தரப்பிலும் கலந்தோசித்து முடிவெடுக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டன. இருதரப்பு தீர்வு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் மீறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்துள்ளது.
மேலும், மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கும் உத்தரவுகளையும் வங்கி நிர்வாகங்கள் கடைப்பிடிப்பது இல்லை எனவும் நிர்வாகம் - பணியாளர் உறவை அலட்சியப்படுத்துகின்றனர்.
இத்தகைய செயல்களில் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் பரோடா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, சோனாலி வங்கி, பெடரல் வங்கி, கனரா வங்கி, கத்தோலி சிரியன் வங்கி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வங்கி வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசு அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்திற்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து இன்று நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
English Summary
All india Bank strike cancelled