போதைப்பொருள் சோதனையில் உறுதி; விபத்துக்குள்ளான புக்கெட் - டெல்லி ஏர் இந்தியா விமானி அதிரடிப் பணிநீக்கம்..! - Seithipunal
Seithipunal


கடந்த ஆகஸ்ட் மாதம் 04-ஆம் தேதியன்று புக்கெட்டிலிருந்து  137 பயணிகள் மற்றும் 08 பணியாளர்களுடன் டெல்லி புறப்பட்ட ஏர்பஸ் ஏ320 விமானம் நடுவானில் திடீரென 300 அடி உயரம் வரை கீழே இறங்கியது. விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகளில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டாலும் சில பயணிகள் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) விசாரணை நடத்து வந்தது. அமைப்பின்  அறிவுறுத்தலின்படி, விமானக் குழுவினருக்குக் கட்டாயப் போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதில் இணைப் பைலட்டுக்குத் பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்த நிலையில், தலைமைப் பைலட்டுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் நரம்புகளைப் பாதிக்கக்கூடிய போதைப்பொருளைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை விதிகளின் மீறல் விவகாரத்தில் நிறுவனம் எவ்வித சமரசமும் செய்யாது என்று தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிர்வாகம், குறித்த விமானியை உடனடியாக வேலையை விட்டு நீக்கியுள்ளது. இச்சம்பவம் விமானத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Air India pilot suspended from duty after drug test positive for Phuket to Delhi


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->